திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.112 திருப்பல்லவனீச்சரம் (பூம்புகார்) - ஈரடி பண் - பழம்பஞ்சுரம் |
பரசு பாணியர் பாடல் வீணையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
1 |
பட்ட நெற்றியர் நட்ட மாடுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திட்ட மாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
2 |
பவள மேனியர் திகழும் நீற்றினர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தழக ராயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
3 |
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தண்ண லாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
4 |
பல்லி லோட்டினர் பலிகொண் டுண்பவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெல்லி யாட்டுகந் தாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
5 |
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திச்சை ராயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
6 |
பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தெங்கு மாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
7 |
பாதங் கைதொழ வேத மோதுவர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தாதி யாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
8 |
படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தடிக ளாயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
9 |
பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
திறைவ ராயிருப் பாரி வர்தன்மை
யறிவா ரார்.
|
10 |
வான மாள்வதற் கூன மொன்றிலை
மாதர் பல்லவ னீச்ச ரத்தானை
ஞான சம்பந்தன நற்ற மிழ்சொல்ல
வல்லவர் நல்லவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |